/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
விவசாய நிலங்களுக்கு செல்ல ரோடு அவசியம்
/
விவசாய நிலங்களுக்கு செல்ல ரோடு அவசியம்
ADDED : நவ 23, 2025 04:17 AM

சோழவந்தான்: சோழவந்தான் அருகே நரியம்பட்டியில் விவசாய நிலங்களுக்கு செல்ல தார் ரோடு அமைக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தினர்.
விவசாயி பூமிநாதன் கூறியதாவது: இங்கு பல ஏக்கர் நிலங்களில் பூக்கள், தென்னை சாகுபடி நடக்கிறது. விவசாய நிலங்களுக்குச் செல்வதற்கு மண் ரோடு மட்டுமே உள்ளது. இதனால் டிராக்டர் உட்பட விவசாய பயன்பாட்டு வாகனங்கள் சென்று வர சிரமமாக உள்ளது. மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக மாறிவிடுவதால் வாகனங்கள் படும் அவதி சொல்லி மாளாது. ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளால் பல இடங்களில் பாதையைக் காணவில்லை.
ஆக்கிரமிப்புகளை அகற்றி தார் ரோடு அமைத்தால் வையத்தான் கிராமத்திற்கு பஸ் வசதி கிடைக்கும். அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை. மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

