
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் - வாடிப்பட்டி மெயின் ரோடு புதுப்பட்டி சாலையோரம் தடுப்பு இல்லாத ஊருணியால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் உள்ளது.
இந்த ரோட்டில் தனிச்சியம், வாடிப்பட்டி வட்டார பகுதிகளுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. அ.புதுப்பட்டி சாலையோரம் உள்ள ஊருணிக்கு பாசன வசதி உள்ளதால் எந்நேரமும் தண்ணீர் நிரம்பி இருக்கும். சில ஆண்டுகளுக்கு முன் இந்தச் சாலை விரிவாக்க பணியின் போது, ஊருணி தடுப்புக் கம்பிகள் குறிப்பிட்ட தொலைவுக்கு சேதமடைந்தன.
அதனை நெடுஞ்சாலைத்துறையினர் முழுமையாக சீரமைக்கவில்லை. இதனால் விபத்து அபாயம் உள்ளது. நெடுஞ்சாலைத்துறை நீதிமன்ற உத்தரவுப்படி சாலையோர ஊருணிக்கு முழுமையான தடுப்பு அமைக்க வேண்டும்.

