தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ சாலையோர அபாய ஊருணி

சாலையோர அபாய ஊருணி

சாலையோர அபாய ஊருணி


ADDED : ஆக 20, 2025 01:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 20, 2025 01:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அலங்காநல்லுார்; அலங்காநல்லுார் -- - வாடிப்பட்டி மெயின் ரோடு அ.புதுப்பட்டியில் சாலையோரம் தடுப்புச் சுவர் இல்லாத ஊருணியால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் உள்ளது.

இந்த ரோட்டில் தனிச்சியம், வாடிப்பட்டி வட்டார கிராமங்களுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. புதுப்பட்டி சாலையோரம் உள்ள ஊருணிக்கு பாசன வசதி உள்ளதால் எந்நேரமும் தண்ணீர் நிரம்பியிருக்கும்.

சில ஆண்டுகளுக்கு முன் இந்த சாலை விரிவாக்க பணியின் போது ஊருணி தடுப்புக் கம்பிகள் சேதமடைந்தன. அதனை நெடுஞ்சாலைத்துறையினர் முழுமையாக சீரமைக்கவில்லை.

இதனால் விபத்து அபாயம் உள்ளது. இரவு நேரங்களில் எதிரே வருவோருக்கு வழி விடும் போது வாகனங்கள் ஊருணிக்குள் பாய வாய்ப்புள்ளது. இதனால் விபரீதம் நடக்கும் முன் சாலையோர ஊருணிக்கு முழுமையான தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us