sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மதுரையில் ரோட்டோர கடைகளில் களை கட்டுது  பத்து ரூபாய் சிக்கன்: பயமுறுத்தும் சிவப்பில் செயற்கை நிறமூட்டிகள்

/

மதுரையில் ரோட்டோர கடைகளில் களை கட்டுது  பத்து ரூபாய் சிக்கன்: பயமுறுத்தும் சிவப்பில் செயற்கை நிறமூட்டிகள்

மதுரையில் ரோட்டோர கடைகளில் களை கட்டுது  பத்து ரூபாய் சிக்கன்: பயமுறுத்தும் சிவப்பில் செயற்கை நிறமூட்டிகள்

மதுரையில் ரோட்டோர கடைகளில் களை கட்டுது  பத்து ரூபாய் சிக்கன்: பயமுறுத்தும் சிவப்பில் செயற்கை நிறமூட்டிகள்

3


ADDED : பிப் 27, 2026 05:10 AM

Google News

ADDED : பிப் 27, 2026 05:10 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:மதுரையில் கடைகள், ரோட்டோர கடைகளில் மாலைநேரத்தில் பளபளக்கும் சிவப்பு நிறத்தில் பத்து ரூபாய்க்கு சிக்கன் பொரித்து தருகின்றனர். உணவுக்கு அனுமதிக்கப்படாத நிறமிகளை சேர்க்கின்றனரா என உணவுப்பாதுகாப்புத்துறையினர் ஆய்வு செய்ய வேண்டும்.

காலையில் கோழியிறைச்சி விற்கும் சிறு கடைகள் மாலைநேரத்தில் அவற்றை பொரித்து விற்கும் உணவகமாக மாறுகிறது. கண்ணைப்பறிக்கும் சிவப்பு நிறத்தில் 'சிக்கன் 65, சிக்கன் போன்லஸ், சிக்கன் ஈரல்' என தனித்தனியாக வைத்து 100 கிராம் சிக்கன் ரூ.10க்கு பொரித்து தருகின்றனர். இரவு வரை அதே எண்ணெய்யில் மீண்டும் மீண்டும் பொரித்து தருகின்றனர். இதைச் சாப்பிடுவோருக்கு உடல்நல உபாதைகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

உணவுப்பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சிவராமபாண்டியன் கூறியதாவது: சில நிறுவனங்களின் மிளகாய்ப்பொடிகளும், காஷ்மீர் சில்லி மிளகாய்ப்பொடியும் சிவப்பு நிறத்தில் வருகிறது. இதுதவிர செயற்கை நிறமூட்டிகள் எனப்படும் சிவப்பு நிறத்தை மீன், சிக்கன் பொரிப்பதற்கு பயன்படுத்தக்கூடாது.

2024 ஏப்., முதல் ஜன 2026 வரை சிறுகடைகள், ரோட்டோர கடைகளில் இருந்து 106 சிக்கன் சாம்பிள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம். அதில் 92 மாதிரிகளின் ஆய்வு முடிவுகள் பெறப்பட்டதில் 69 மாதிரிகள் பாதுகாப்பானது எனவும் 23 மாதிரிகள் பாதுகாப்பற்றது என உறுதியானது. அதாவது மத்திய அரசு அனுமதிக்காத செயற்கை நிறமூட்டிகள் கலந்து சிக்கன் தயாரித்துள்ளனர். 23 கடைகள் மீது நீதிமன்ற வழக்கு பதியப்பட்டது. 4 வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டு ரூ.80ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மீதி வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ரூகோ திட்டத்தின் கீழ் ஓட்டல், உணவகம், கோயில் பிரசாத கூடம், பள்ளி, கல்லுாரி, தொழிற்சாலை கேண்டீன்களில் ஒருமுறை பொரித்த எண்ணெய்யை மறுமுறை பயன்படுத்தாமல் மறுசுழற்சிக்கு கொடுக்கலாம். அதை பயோடீசலாக மாற்றுவதற்கான ஏஜன்சிகள் மதுரையில் இரண்டு உள்ளன. முறுக்கு, பஜ்ஜி, பூரி பொரித்த எண்ணெய் மட்டுமல்ல சிக்கன், மட்டன், மீன் பொரித்த எண்ணெய்யை மறுசுழற்சிக்கு தரலாம்.

உணவுப்பாதுகாப்புத்துறை அங்கீகாரம் பெற்ற ஏஜன்சிகளிடம், இந்த எண்ணெய்யை கொடுத்தால் நல்ல விலை கிடைக்கும். அதை வைத்து புதிதாக எண்ணெய் வாங்கி பொரிக்கலாம்.

ரோட்டோர கடைகளில் கண்ணைப்பறிக்கும் சிவப்பு நிறத்தில் சிக்கன், மீன் பொரித்து தந்தால் 94440 42322 வாட்ஸ்ஆப் எண்ணில் புகார் செய்யலாம் என்றார்.






      Dinamalar
      Follow us