ADDED : நவ 05, 2024 05:34 AM

மதுரை: மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட் வளாகத்தில் ரோடு அமைக்கப்பட்டு 15 ஆண்டுகளானதால்வியாபாரிகள், நுகர்வோர் உள்ளே செல்ல முடியாத அளவுக்கு சேறும், சகதியுமாக சிரமப்படுத்துகிறது.
மாட்டுத்தாவணி அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் சின்ன மாயன் கூறியதாவது:
இங்கு 2010ல் ரோடு அமைக்கப்பட்டது. அதன் பின் மாநகராட்சியிடம் பலமுறை தெரிவித்தும், கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் தற்போது வரை ரோடு அமைக்கவில்லை. கடந்த ஆகஸ்டில்தொழிலதிபர் ராஜேந்திரன் ரோடு அமைக்க ரூ.3 கோடி நன்கொடையாக தர முன் வந்தார். மாநகராட்சியில் ரோடு அமைக்க அனுமதி கேட்டு பலமுறை விண்ணப்பித்தும் அனுமதி தராததால்அந்தத் தொகையை கோயிலுக்கு பயன்படுத்திக் கொள்வதாக அவர் தெரிவித்து விட்டார். இதனால் மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் ரோடு என்பது பெரும் கனவாகவே உள்ளது என்றார்.
