ADDED : மார் 01, 2026 05:47 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை பெருங்குடி அமுதம் மெட்ரிக் பள்ளியில் 'ரோபோட்டிக்ஸ் எக்ஸ்போ' கண்காட்சி நடந்தது. முதல்வர் ஜெயஷீலா தலைமை வகித்தார்.
துணை முதல்வர் ஸ்டெல்லா ஜெயமணி முன்னிலை வகித்தார். மாணவர்கள் ரோபோக்களின் வடிவமைப்பு, செயல்பாடு, பயன்கள் குறித்து விளக்கினர். ஆசிரியைகள் கார்த்திகா, நாகேஸ்வரி ஒருங்கிணைத்தனர். புனிதா அன்னாள், அமுதம் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
