ADDED : அக் 22, 2026 12:53 AM
அ நிறம் | அளவு
மதுரை:
மதுரை மீனாட்சி மிஷன் மற்றும் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பில் தென் தமிழகத்தில் 10 ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்ட ரோபோட்டிக் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.
இம்மருத்துவமனை மருத்துவ இயக்குநர் ரமேஷ் அர்த்தநாரி கூறியதாவது:
இம்மருத்துவமனையில் 10 ஆண்டுகளில் கணையம், உணவுக் குழாய் கல்லீரல் போன்ற பிரிவில் 500க்கும் மேல் இவ்வகை சிகிச்சைகள் நடந்துள்ளன. இது
மருத்துவ நிபுணத்துவம், தொழில் நுட்பத்தின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி.
இனி உறுப்பு மாற்று உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளுக்கு ரோபோட்டிக் தொழில் நுட்பத்தை விரிவுபடுத்த உள்ளோம் என்றார்.
டாக்டர்கள் பிரதீப், ஜெகதீஷ் சந்திரபோஸ்,
பால் வின்சென்ட், விஜய பாஸ்கர், பத்மா பங்கேற்றனர்
