ADDED : ஆக 13, 2025 02:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி; ரோட்டரி சங்கம், அறம் மையம், தமிழ்நாடு மெர்க்கன்டைல் பாங்க், தொழிற்துறை நிறுவனங்களின் பங்களிப்புடன் உசிலம்பட்டி டி.இ.எல்.சி., பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 5.15 லட்சம் மதிப்பில் சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா பள்ளி முதல்வர் மார்க்ரெட் கிரே ஷீலி தலைமையில் நடந்தது. உசிலம்பட்டி ரோட்டரி சங்கத் தலைவர் சதீஷ்பாபு, செயலாளர் ராஜ்மோகன், பொருளாளர் சேகர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி சங்க மாவட்ட முதல் பெண் ஆளுநர் ஆனந்த ஜோதி, மாவட்டத் தலைவர் குமரப்பன், செயலாளர் ராஜேந்திரன் பங்கேற்றனர். ஆதரவற்ற பெண்ணுக்கு ரூ. 5 லட்சம் மதிப்புள்ள இ-ஆட்டோ வழங்கப்பட்டது.