/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை கலெக்டர் கார் மீது ரவுடி மகன் கார் மோதல்
/
மதுரை கலெக்டர் கார் மீது ரவுடி மகன் கார் மோதல்
ADDED : ஜன 10, 2025 02:31 AM

மதுரை:மதுரையில் கலெக்டர் சங்கீதா கார் மீது, எதிர்பாராதவிதமாக ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் கார் லேசாக மோதியது. இதுதொடர்பாக, அவரது மகனிடம் விசாரணை நடத்தப்பட்டது.
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலெக்டர் சங்கீதா நேற்று பங்கேற்று, மதியம் மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் வந்தார்.
அப்போது சிக்னல் அருகே திரும்பிய போது, எதிரே வந்த 'பார்ச்சூனர்' கார் லேசாக மோதியது.
இது தொடர்பாக, கலெக்டரின் கார் டிரைவருக்கும், பார்ச்சூனர் காரை ஓட்டி வந்தவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அங்கிருந்த போலீசார், கலெக்டர் காரை உடனடியாக அனுப்பி வைத்தனர். பார்ச்சூனர் காரை ஓட்டி வந்தவரிடம் விசாரித்தபோது, ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் மகன் நலந்த்குமார், 37, என்பது தெரிந்தது.
காரை போலீசார் பறிமுதல் செய்து, நலந்த்குமாரிடம் விசாரித்தனர். இதற்கிடையே, கலெக்டரை சந்திக்க வரிச்சியூர் செல்வம் கலெக்டர் அலுவலகம் வந்தார்.
ஆனால், ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் இருந்ததால், சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினார்.

