/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'கிளாமர்' காளி கொலையில் ரவுடி 'வெள்ளை' காளி கைது; 22 ஆண்டுகளாக தொடரும் பழிக்குப்பழி
/
'கிளாமர்' காளி கொலையில் ரவுடி 'வெள்ளை' காளி கைது; 22 ஆண்டுகளாக தொடரும் பழிக்குப்பழி
'கிளாமர்' காளி கொலையில் ரவுடி 'வெள்ளை' காளி கைது; 22 ஆண்டுகளாக தொடரும் பழிக்குப்பழி
'கிளாமர்' காளி கொலையில் ரவுடி 'வெள்ளை' காளி கைது; 22 ஆண்டுகளாக தொடரும் பழிக்குப்பழி
ADDED : ஏப் 13, 2025 04:27 AM

மதுரை: மதுரையில் பழிக்குப்பழியாக தி.மு.க., பிரமுகர் வி.கே.குருசாமிக்கும், அ.தி.மு.க., பிரமுகர் ராஜபாண்டி தரப்பிற்கும் 22 ஆண்டுகளாக தொடரும் முன்பகையால் இதுவரை 22 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். கடைசியாக கொலை செய்யப்பட்ட 'கிளாமர்' காளி கொலை வழக்கில் பிரபல ரவுடி வெள்ளை காளி கைது செய்யப்பட்டார். ஓரிரு நாளில் அவரை காவலில் எடுத்து போலீசார் விசாரிக்க உள்ளனர்.
மதுரை மேலஅனுப்பானடி ஹவுசிங்போர்டு 'கிளாமர்' காளி என்ற காளீஸ்வரன் 32, கடந்த மார்ச் 22இரவு தனக்கன்குளம் மொட்டமலை பகுதியில் வெள்ளை காளி கூட்டாளிகளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
'கிளாமர்' காளி மதுரை மாநகராட்சி தி.மு.க., முன்னாள் மண்டல தலைவர்வி.கே. குருசாமியின் சகோதரி மகன். குருசாமிக்கும், அ.தி.மு.க., முன்னாள் மாநகராட்சி மண்டல தலைவர் ராஜபாண்டிக்கும் அரசியல் ரீதியான பகை 22 ஆண்டுகளாக குடும்ப பகையாக மாறி இருதரப்பிலும் மாறி மாறி 22 கொலைகள் நடந்தன.
காளி கொலைவழக்கில்சதி திட்டம் தீட்டியதாக வெள்ளை காளியின் தாயார் ஜெயக்கொடி 65, மற்றும் கூட்டாளிகள் 6 பேர் மார்ச் 29ல் கைது செய்யப்பட்டனர். தற்போது வேறு வழக்குகளில் புழல் சிறையில் உள்ள வெள்ளை காளியையும் 'கிளாமர்' காளி கொலை வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர். ஓரிரு நாட்களில் காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
அச்சமயத்தில் 'என்கவுன்டர்' நடத்த திட்டமிட்டுள்ளனர் என போலீசார் மீது வெள்ளை காளி குடும்பத்தினர் குற்றம்சாட்டி வருகின்றனர். ஏற்கனவே ஒரு வழக்கில்வெள்ளை காளியை காவலுக்கு எடுத்துவிசாரித்தபோது, இதேபோல் அவரது தாயார் ஜெயக்கொடி குற்றம்சாட்டி வீடியோ வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

