/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'ட்விஸ்ட்' கொடுத்த ரவுடி; 'சஸ்பெண்ட்' ஆன இன்ஸ்பெக்டர்
/
'ட்விஸ்ட்' கொடுத்த ரவுடி; 'சஸ்பெண்ட்' ஆன இன்ஸ்பெக்டர்
'ட்விஸ்ட்' கொடுத்த ரவுடி; 'சஸ்பெண்ட்' ஆன இன்ஸ்பெக்டர்
'ட்விஸ்ட்' கொடுத்த ரவுடி; 'சஸ்பெண்ட்' ஆன இன்ஸ்பெக்டர்
ADDED : மார் 29, 2025 05:34 AM

மதுரை: மதுரையில் வி.கே.குருசாமி, ராஜபாண்டி ஆகிய இருதரப்பு குடும்பப் பகை தொடர்பாக, மேலஅனுப்பானடி ஹவுசிங்போர்டு கிளாமர் கார்த்திக், 32, மார்ச் 22ம் தேதி இரவு, 22வது நபராக கொலை செய்யப்பட்டார்.
இந்த தலைமுறை கடந்த பகை தொடர்பாக, இருதரப்பைச் சேர்ந்தவர்கள், அவர்கள் கூட்டாளிகளை, உள்ளூர் போலீசார் மட்டுமின்றி, சிறப்பு புலனாய்வு பிரிவு, ஒருங்கிணைந்த குற்றத்தடுப்பு போலீசாரும் கண்காணித்து வருகின்றனர். இச்சூழலில் கார்த்திக் கொலை செய்யப்பட்டார்.
இதுவரை கொலையாளிகள் கண்டறியப்படவில்லை. பழிக்குப்பழியாக ராஜபாண்டி ஆதரவாளர் வெள்ளைக்காளி கூட்டாளிகள் தான் கொலை செய்திருக்க வேண்டும் என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.
இக்கொலையில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில், வெள்ளைக்காளி கூட்டாளி சுள்ளான் பாண்டி சரணடைய உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவரை கைது செய்ய போலீசார் காத்திருந்தனர்.
அப்போது சரணடைய வந்த சுள்ளான் பாண்டி, நீதிமன்ற அறைக்குள் வேகமாக சென்று பதுங்கியதால், அவரை கைது செய்ய முடியவில்லை. கார்த்திக் கொலை வழக்கில் சரணடைவார் என்று காத்திருந்த போலீசாருக்கு, சுள்ளான் பாண்டி, 'ட்விஸ்ட்' கொடுத்தார். கூடல்புதுார் ஸ்டேஷனில், 2021ல் பதிவு செய்யப்பட்ட 'பிடிவாரன்ட்' உள்ள வழக்கில் சரணடைவதாக கூறினார்.
பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், அவரை கைது செய்யாமல் மெத்தனமாக இருந்ததாக, கூடல்புதுார் இன்ஸ்பெக்டர் பாலமுருகனை, கமிஷனர் லோகநாதன் 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.