/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சர்ச்சையில் சிக்கிய ராயபுரம் 'சர்ச்'
/
சர்ச்சையில் சிக்கிய ராயபுரம் 'சர்ச்'
ADDED : ஜூலை 16, 2025 06:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான் : சோழவந்தான் அருகே ராயபுரத்தில் சர்ச் இடங்களை தனியாருக்கு விற்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஜெர்மேன் சர்ச்சிற்க்கு பூட்டு போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
அப்பகுதி சிறுமணி கூறியதாவது:
எங்கள் முன்னோர் மதமாற்றம் அடைந்து தங்கள் நிலங்களை சர்ச் நிர்வாகத்திற்கு கொடையாக அளித்தனர். தற்போது சேசு சபையின் கட்டுப்பாட்டில் சர்ச் உள்ளது. சர்ச்சுக்கு சொந்தமான இடங்களை தனியாருக்கு விற்க சபை நிர்வாகத்தினர் முயற்சிக்கின்றனர் என்றார்.