/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வீட்டு மனை தருவதாக கூறி ரூ.125 கோடி மோசடி: கைது 1
/
வீட்டு மனை தருவதாக கூறி ரூ.125 கோடி மோசடி: கைது 1
ADDED : பிப் 13, 2024 06:40 AM

மதுரை : விருதுநகர் மாவட்டத்தில் வீட்டு மனை தருவதாககூறி 600 பேரிடம் மொத்தம் ரூ.125 கோடி மோசடி செய்த தியாகராஜன் 36, கைது செய்யப்பட்டார்.
மதுரை எஸ்.எஸ்.காலனியில் இயங்கிய நியோமேக்ஸ் நிதி நிறுவனம் மக்களிடம் ரூ.பல கோடி முதலீடு பெற்று மோசடி செய்தது. இதன் இயக்குநர்கள் வீரசக்தி, கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியனை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். 17 நிறுவனங்களுக்கு 'சீல்' வைக்கப்பட்டு, ரூ.17.25 கோடி மதிப்பிலான 752 வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்பட்டுள்ளன.
விருதுநகரில் செயல்பட்டு வந்த இதன் துணை நிறுவனமான குளோமேக்ஸின் ஏஜென்ட் தியாகராஜனை மதுரை பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி., மணீஷா தலைமையிலான போலீசார் கைது செய்தனர். இவர் 500 முதல் 600 பேரிடம் ரூ.125 கோடி மோசடி செய்தார். பணத்தை கேட்ட முதலீட்டாளர்களிடம் மனை வாங்கித்தருவதாக கூறி மேலும் பணம் பெற்று தியாகராஜன் மோசடி செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.