ADDED : செப் 10, 2026 01:17 AM
மதுரை: மதுரை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில்(ஆர்.டி.ஓ.,) ரூ.1.80 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலர் உட்பட 8 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள இந்த அலுவலகத்தில் செப்.2ம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆர்.டி.ஓ., கார்த்திகேயன் இருந்தார். அறை ஒன்றில் கீழே கிடந்த ரூ.1900, அலமாரியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.17 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆய்வாளர் செல்வத்திடம் ரூ.1500, கேமரா மேன் சிவசுப்பிரமணியத்திடம் ரூ.3500 பறிமுதல் செய்யப்பட்டது. புரோக்கர்கள் கனியிடம் ரூ.60,200, மாரீஸ்குமாரிடம் ரூ.79,000, தங்கதுரையிடம் ரூ.13,500, முத்துக்குமாரிடம் ரூ.500 பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் ரூ.1.80 லட்சம் பறிமுதலானது.
இதுதொடர்பாக ஆர்.டி.ஓ., கார்த்திகேயன், ஆய்வாளர் செல்வம் உட்பட 8 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
