/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாநகராட்சி ரோடுகளை சீரமைக்க ரூ.44.97 கோடி: தரத்தை கண்காணிக்குது அ.தி.மு.க., கவுன்சிலர் குழு
/
மாநகராட்சி ரோடுகளை சீரமைக்க ரூ.44.97 கோடி: தரத்தை கண்காணிக்குது அ.தி.மு.க., கவுன்சிலர் குழு
மாநகராட்சி ரோடுகளை சீரமைக்க ரூ.44.97 கோடி: தரத்தை கண்காணிக்குது அ.தி.மு.க., கவுன்சிலர் குழு
மாநகராட்சி ரோடுகளை சீரமைக்க ரூ.44.97 கோடி: தரத்தை கண்காணிக்குது அ.தி.மு.க., கவுன்சிலர் குழு
ADDED : ஜன 02, 2025 05:19 AM
மாநகராட்சி பகுதியில் 3 மாதங்களாக தென்மேற்கு, வட கிழக்கு பருவ, கோடை மழையால் வாகனங்கள் செல்லும் பெரும்பாலான ரோடுகள், 'பல்லாங்குழிகளாக' மாறிவிட்டன. வாகன ஓட்டிகள் தினமும் சாகச பயணத்தை மேற்கொள்கின்றனர். இதனால் நாள்பட்ட உடல் வலியால் அவதிப்படுகின்றனர்.
பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக குடியிருப்பு பகுதிகளில் சந்து பொந்துகளில் உள்ள ரோடுகளை கூட குறுக்கே உடைத்து 'குழாய் பதிக்கிறேன்' என்ற பெயரில் ஒப்பந்ததாரர்கள் சேதப்படுத்துகின்றனர்.
மோசமான ரோடுகள் குறித்து மாநகராட்சி கவுன்சில் கூட்டங்களில் அ.தி.மு.க., தொடர்ந்து குற்றம்சாட்டியது.
கடைசி கூட்டத்தில் ரோடுகள் தரமின்மை குறித்து எதிர்க்கட்சி தலைவர் சோலைராஜா கேள்வி எழுப்பினார். அவரது கருத்துக்கு காங்., மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி கவுன்சிலர்களும் ஆதரவு தெரிவித்து ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். இந்நிலையில் மாநகராட்சி எல்லைக்குள் 398 ரோடுகளை சீரமைக்க ரூ.44.97 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
கமிஷனர் தினேஷ்குமார் கூறியதாவது: மாநகராட்சி எல்லைக்குள் செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டத்தால் ரோடுகள் சேதமடைந்து வருகின்றன.
இதை சீரமைக்க தமிழ்நாடு நகர்ப்புற ரோடுகள் மேம்பாடு திட்டத்தில் 241,மாநில நிதிக்குழு ஊக்கத் தொகை மானியத்தில் 15, மாநில நிதிக்குழு மானியத்தில் 112, மாநகராட்சி பொது நிதியில் 30 என மொத்தம் 398 ரோடுகள் சீரமைக்க நகராட்சி நிர்வாக ஆணையகம் அனுமதி அளித்துள்ளது.
இதன் மூலம் 69.71 கி.மீ., நீளத்தில் புதிய, ரோடுகள் சீரமைப்பு பணி நடக்கவுள்ளது. இதற்கான டெண்டர் ஜன.22, 24ல் கோரப்பட்டு விரைவில் ரோடுகள் சீரமைக்கப்படும் என்றார்.
அ.தி.மு.க., கண்காணிக்கும்
மாநகராட்சி அ.தி.மு.க., எதிர்க்கட்சி தலைவர் சோலைராஜா கூறியதாவது: ரோடுகளை சீரமைக்க அ.தி.மு.க., தொடர்ந்து வலியுறுத்தியது. மாநகராட்சி ரோடு என்றாலே அதன் தரம் கேள்விக்குறியாகிறது. மக்கள் நலன் கருதி அ.தி.மு.க., கண்காணிக்க முடிவு செய்துள்ளது.
இதனால் 398 ரோடுகளும் நகராட்சி நிர்வாக விதிகள் படி அமைக்கப்படுகிறதா என்பது குறித்து அ.தி.மு.க., கவுன்சிலர் தலைமையில் ஆய்வு செய்ய உள்ளோம். தரமின்றி அமைக்கப்பட்டால் ஆதாரங்களுடன் கவுன்சில் கூட்டத்தில் தெரிவிப்போம். தரமானது என்றால் பாராட்டுவோம் என்றார்.

