ADDED : ஏப் 20, 2026 11:22 PM
அ நிறம் | அளவு
மேலுார்: தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் ஒருவர் அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை ஆவணங்களின்றி கொண்டு செல்லலாம் என்ற விதி உள்ளது.
ஆனால் மேலுார் வெள்ளரிப்பட்டி டோல்கேட் பகுதியில் பறக்கும் படை அதிகாரி விக்னேஷ் ஆய்வின்போது அய்யாபட்டி பால்பாண்டி டூவீலரில் ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.50 ஆயிரத்தை பறிமுதல் செய்து இளநிலை வருவாய் ஆய்வாளர் சுதர்சன் மூலம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
