/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரோட்டில் போட்ட ரூ.7 லட்சம் இரண்டே மாதத்தில் வீணானதே
/
ரோட்டில் போட்ட ரூ.7 லட்சம் இரண்டே மாதத்தில் வீணானதே
ரோட்டில் போட்ட ரூ.7 லட்சம் இரண்டே மாதத்தில் வீணானதே
ரோட்டில் போட்ட ரூ.7 லட்சம் இரண்டே மாதத்தில் வீணானதே
ADDED : டிச 08, 2024 04:53 AM

கொட்டாம்பட்டி: வலைச்சேரிபட்டியில் இரண்டு மாதங்களுக்கு முன் அமைத்த தார் ரோடு பெயர்ந்து, ஜல்லிக்கற்களாக மாறியதால் செலவழித்த தொகை ரூ.7 லட்சம் வீணாகியுள்ளது.
வலைச்சேரிபட்டியில் இருந்து பெரியநாயகி அம்மன் கோயிலுக்கு செல்லும் பகுதியில் பலநுாறு பேர் வசிக்கின்றனர். விவசாய நிலங்கள், பெரியநாயகி அம்மன், விநாயகர் கோயில் உள்ளது. இப் பகுதியில் வசிப்போர் பயன்படுத்துவதற்காக எம்.எல்.ஏ., நிதியில் ரூ.7 லட்சத்தில் தார் ரோடு அமைக்கப்பட்டது. ஒன்றரை மாதங்களுக்கு முன் அமைத்த இந்த ரோடு தற்போது சிதிலமடைந்துவிட்டது.
அப்பகுதியினர் கூறியதாவது: ஏற்கனவே அமைத்திருந்த தார் ரோடு மீது புதிதாக ரோடு அமைத்தனர். ரோட்டின் கனம் குறைவாக உள்ளதால் பல இடங்களில் மண்தரை போலவே காணப்படுகிறது. அதில் புள்கூட முளைக்க துவங்கியுள்ளது. ரோட்டை கையால் தொட்டாலே ஜல்லிக் கற்களாக பெயர்ந்து வருகிறது. பல இடங்களில் தார் பெயர்ந்து மேடு பள்ளமாக காட்சியளிக்கிறது. 2 மாதங்களில் சிதிலமடைந்ததால், மக்களின் வரிப்பணம் வீணாகியுள்ளது. கலெக்டர், ஒன்றிய அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்து தரமான ரோடு அமைக்க வேண்டும் என்றனர்.
உதவி பொறியாளர் சரவணன் கூறுகையில், ''ஒப்பந்ததாரர் கான்கிரீட் கலவை இயந்திரத்தை கொண்டு சென்றதால் ரோடு பள்ளமாகிவிட்டது. ஒப்பந்ததாரரை கொண்டு மீண்டும் தரமான ரோடு அமைக்கப்படும் என்றார்.