/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரூ.7000 லஞ்சம்: வி.ஏ.ஓ., உட்பட 2 பேர் கைது
/
ரூ.7000 லஞ்சம்: வி.ஏ.ஓ., உட்பட 2 பேர் கைது
ADDED : ஏப் 16, 2025 04:26 AM

மதுரை : மதுரை மாவட்டம் மேலுார் அருகே பட்டா மாறுதலுக்கு முன்னாள் ராணுவவீரரிடம் ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., மற்றும் பெண் உதவியாளர் கைது செய்யப்பட்டனர்.
மேலுார் அருகே கோட்டைப்பட்டியைச் சேர்ந்தவர் மலைச்செல்வன். ஓய்வுபெற்ற ராணுவவீரரான இவர், தனது பெற்றோரிடம் இருந்த ஒரு ஏக்கர் 65 சென்ட் இடத்தை பெற்று கருங்காலக்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்தார். அங்கிருந்து பட்டா மாறுதலுக்கு கச்சிராயன்பட்டி வி.ஏ.ஓ., துரைபாண்டிக்கு 46, பரிந்துரைக்கப்பட்டது. வி.ஏ.ஓ.,வை மலைச்செல்வன் சந்தித்தபோது ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டார். அவர் ஓய்வுபெற்ற ராணுவவீரர் என தெரிந்ததும் ரூ.7 ஆயிரம் தந்தால் போதும் என்றார்.
இதுகுறித்து லஞ்சஒழிப்பு ஏ.டி.எஸ்.பி., சத்யசீலனிடம் மலைச்செல்வன் புகார் அளித்தார். நேற்று மதியம் வி.ஏ.ஓ., அலுவலகத்தில் துரைபாண்டியிடம் மலைச்செல்வன் ரூ.7 ஆயிரம் கொடுத்தார். அதை அங்கிருந்த அரசு பணி சாராத தனது உதவியாளர் சுந்தரராஜபுரம் பாக்கியலட்சுமியிடம் 39, கொடுக்குமாறு கூறினார். அதன்படியே மலைச்செல்வன் கொடுத்தார். இதைதொடர்ந்து கையும், களவுமாக பாக்கியலட்சுமியையும், துரைபாண்டியையும் இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ்பிரபு, பாரதிப்ரியா, குமரகுரு தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

