/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரூ. 49.25 கோடி பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர்
/
ரூ. 49.25 கோடி பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர்
ரூ. 49.25 கோடி பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர்
ரூ. 49.25 கோடி பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர்
ADDED : நவ 14, 2024 06:59 AM
அழகர்கோவில்; அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் கட்டுமானப் பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
நேற்று (நவ. 13) நடந்த இந்நிகழ்வில் அறநிலையத் துறை இணை கமிஷனர் செல்லத்துரை, அறங்காவலர்கள் பாண்டியராஜன், செந்தில்குமார், மீனாட்சி பிரியாந்த், செயற்பொறியாளர் சந்திரசேகர் குத்துவிளக்கேற்றினர். ரூ. 40 கோடி செலவில் பக்தர்கள் தங்குவதற்கு 'யாத்ரி நிவாஸ்', அர்ச்சகர்கள் குடியிருப்பு, விருந்தினர் தங்குமிடம், 2 உணவகங்கள், 12 கடைகள், 2 நவீன கழிப்பறைகள், 2 மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள், இரு இடங்களில் வாகன நிறுத்துமிடம், கோட்டைச் சுவர் புனரமைப்பு, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், ரூ. 9.25 கோடி செலவில் கோயில் பணியாளர்களுக்கு 24 குடியிருப்புகள் கட்டுதல் என மொத்தம் ரூ. 49.25 கோடி கட்டட பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
அறங்காவலர் குழுத் தலைவர் பிரதிநிதி நல்லதம்பி, உதவி கோட்டப் பொறியாளர் வெங்கடேஷ் பாபு, வலையபட்டி ஊராட்சித் தலைவர் தீபா, கண்காணிப்பாளர் பாலமுருகன், உதவிப் பொறியாளர் கிருஷ்ணன், பி.ஆர்.ஓ., முருகன் பங்கேற்றனர்.

