ADDED : அக் 08, 2024 04:45 AM

மதுரை : மதுரை தல்லாகுளத்தில் ராஷ்டிரி ஸ்வயம் சேவக் சங்கம் சார்பில் நிர்வாகிகள் கூட்டம் அகில பாரத இணைப் பொதுச் செயலாளர் முகுந்தா தலைமையில் நடந்தது.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: 1925 ல் ஆர்.எஸ்.எஸ்., துவக்கப்பட்டது. இந்தியாவில் மட்டும் இன்றி தமிழகத்திலும் பெரிதளவில் பரவியது. இந்த சங்கம் சமூக சேவைகளுக்கும், தானாக முன்வந்து செய்யும் செயல்களுக்கும் ஹிந்து மதத்தில் முக்கியத்துவத்தை தருகிறது.
அரசியல் மாற்றமானது எப்போதாவது நிகழும். ஆனால் மனித நிர்மாணம் என்பது ஒரு மிகமுக்கியமான பொறுப்பு. இதனைத்தான் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கம் 99 ஆண்டுகளாக செய்து வருகிறது. இந்த மனித நிர்மாண பயணத்தில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும். அப்படி ஒவ்வொருவரும் இந்தப் பயணத்தில் பங்கு கொள்ளும்போது நாம் ஒரு உன்னத பாரதத்தை நோக்கிய இலக்கை அடைவோம்.
இந்த மாதிரியான நிகழ்ச்சிகளால் ஆர்.எஸ்.எஸ்.,சுக்கு பொதுமக்களுடன் ஒரு மேடையை உருவாக்கி அவர்களிடம் தொடர்பு கொள்ள உதவுகிறது என்றார். மாவட்டத் தலைவர் மங்கலமுருகன், தென்தமிழ்நாடு மாவட்ட தலைவர் வன்னியராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.
