/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் கூட்டம்
/
ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் கூட்டம்
ADDED : மார் 03, 2026 04:45 AM
மதுரை: மதுரை ஒத்தக்கடையில் ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு பயணம் குறித்த கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பேராசிரியர் சந்திரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். செயலாளர் சேதுராமன் வரவேற்றார். சிறப்பு விருந்தினரான தென்பாரத செய்தி தொடர்பாளர் ஸ்ரீராம், ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டில் இதுவரை என்ன சாதித்தது என்பது குறித்து விளக்கினார்.
அவர் பேசுகையில், '' நுாற்றாண்டு விழாவில் 5 விஷயங்கள் கவனிக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ்., கூறுகிறது. குடும்பத்தில் அனைவரும் ஒற்றுமையாக சேர்ந்து ஒரு நேரம் சாப்பிட வேண்டும்.
வாரம் ஒருநாள் வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து நாமாவளி சொல்ல வேண்டும். வாரம் ஒரு நாள் அருகில் உள்ள கோயிலுக்கு பண்பாட்டு உடையில் செல்ல வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை தீர்த்தயாத்திரை செல்ல வேண்டும். இவை குடும்ப ஒற்றுமைக்கு வழிவகுக்கும்'' என்றார். மாவட்ட இணைச் செயலாளர் பிரசாத் நன்றி கூறினார்.

