/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அமைச்சர்களுக்காக காத்திருக்கும் ஆர்.டி.ஓ., அலுவலகங்கள்
/
அமைச்சர்களுக்காக காத்திருக்கும் ஆர்.டி.ஓ., அலுவலகங்கள்
அமைச்சர்களுக்காக காத்திருக்கும் ஆர்.டி.ஓ., அலுவலகங்கள்
அமைச்சர்களுக்காக காத்திருக்கும் ஆர்.டி.ஓ., அலுவலகங்கள்
ADDED : பிப் 13, 2024 04:21 AM
மதுரை : மதுரை பைபாஸ் ரோட்டில் இயங்கும் தெற்கு ஆர்.டி.ஓ., அலுவலகம் அரசு போக்குவரத்துக் கழக கட்டடத்தில் வாடகைக்கு இயங்கி வருகிறது. போக்குவரத்து மிகுந்த பைபாஸ் ரோட்டில் இயங்குவதால் இந்த அலுவலகம் செயல்படுவதில் சிரமங்கள் இருந்தன. இதையடுத்து இந்த அலுவலகத்திற்கென சொந்தமாக கட்டடம் கட்ட அரசு இடம் தேடியது.
நாகமலை புதுக்கோட்டை அருகே வடபழஞ்சியில் 3 ஏக்கர் நிலத்தில் ரூ.3.5 கோடி மதிப்பீட்டில் புதிய அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இதேபோல மேலுாரில் வாகன ஆய்வாளரைக் கொண்டு இயங்கும் யூனிட் அலுவலகத்திற்கும் அழகர்கோவில் ரோட்டில் ரூ.2.25 கோடி மதிப்பீட்டில் சொந்த கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
இரண்டும் உள்ளூர் அமைச்சர்களின் தேதிக்காக திறப்பு விழா காணாமல் உள்ளன.
மத்திய ஆர்.டி.ஓ., அலுவலகம் விரைவு போக்குவரத்துக் கழக கட்டடத்தில் வாடகைக்கு இயங்கி வருகிறது. இதற்கும் சொந்த அலுவலகம் கட்டநகருக்குள் இடம் பார்க்கின்றனர்.