/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் ஆரோக்கிய மாரத்தான் ஓட்டம்
/
மதுரையில் ஆரோக்கிய மாரத்தான் ஓட்டம்
ADDED : அக் 21, 2024 05:20 AM

மதுரை: மதுரை காந்தி மியூசியத்தில், தி பெடரல், தேவகி சிறப்பு மருத்துவமனை சார்பில், 'ரன் பார் ஹெல்த்' எனும் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தும் மாரத்தான் போட்டி நடந்தது.
தேவகி மருத்துவமனை நிறுவனர் நாகேந்திரன், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க துணைத் தலைவர் சோலை ராஜா கொடி அசைத்து துவக்கினர். ஆண்களுக்கு 10 கி.மீ., துாரம், பெண்களுக்கு 5 கி.மீ., துாரம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. காந்தி மியூசியத்தில் தொடங்கி பல்வேறு பகுதிகளுக்கு சென்று மீண்டும் காந்தி மியூசியத்தில் நிறைவடைந்தது. வென்றவர்களுக்கு பதக்கங்களை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.
வெங்கடேசன் எம்.எல்.ஏ., தேசிய கூடைப்பந்து சாம்பியன் ஆதிரா மனோஜ், மருத்துவமனை இணை இயக்குனர்கள் கார்த்திகா, தியா, டாக்டர்கள் நவீன், ஜெய் பிரவீன் பங்கேற்றனர்.

