ADDED : அக் 25, 2026 05:56 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரைக் கோட்டத்தில் கள்ளிக்குடி – திருமங்கலம் இடையே நடைபெறும் பணி காரணமாக இன்று நாகர்கோவில் – கோவை (16321), செங்கோட்டை – மதுரை (56772) ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுவதாக முன்னர் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அவை வழக்கமான பாதையிலேயே இயங்கும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனினும், நேற்று (அக்.,25) இரவு குருவாயூரில் இருந்து சென்னை எழும்பூர் புறப்பட்ட ரயில் (16128), இன்று விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக மாற்றுப் பாதையில் இயங்கும்.
