/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஊரக வளர்ச்சி அனைத்து சங்க கூட்டமைப்பு கூட்டம்
/
ஊரக வளர்ச்சி அனைத்து சங்க கூட்டமைப்பு கூட்டம்
ADDED : ஏப் 27, 2025 04:45 AM

மதுரை :  மதுரையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பின் கூட்டம் நடந்தது. ஊரக வளர்ச்சி ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் சங்க மாநில பொருளாளர் செந்தில்குமார் வரவேற்றார்.
மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியன் பேசுகையில், '' காலிப்பணியிடங்கள் நிரப்ப வேண்டும். ஊராட்சி வளர்ச்சி செயலாளர்களுக்கு சிறப்பு நிலை, தேர்வு நிலை ஊதியம் நிர்ணயம் செய்து கருவூலம் மூலம் வழங்க வேண்டும். ஒரே ஊதியம் என்ற நிலையை மாற்ற வேண்டும்.
விடுமுறை நாட்களிலும், இரவு நேரங்களிலும் வேலை செய்யும் சூழல் அதிகரித்துள்ளது. அதற்கேற்ற ஊதியம் கிடைப்பதில்லை.
ஆன்லைன் மீட்டிங் என எப்போதும் வேலையில் ஈடுபடுவதால் மனஅழுத்தம் அதிகரித்துள்ளது. ஓய்வூதியத்தை ரூ. 2 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தவேண்டும்'' என்றார்.
ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநிலப்பொருளாளர் முத்துச்செல்வம் நன்றி கூறினார். கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் சார்லஸ், செல்லப்பாண்டி, தங்கராஜ், ரவி, வாசு, சாஜூ, மணிராஜ், குமரேசன், நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

