/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஊராட்சி செயலாளருக்கு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி வேண்டாம் ஊரக வளர்ச்சித்துறை சங்கங்கள் வலியுறுத்தல்

ADDED : நவ 11, 2025 03:54 AM
மதுரை: 'வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளில் ஊராட்சி செயலாளர்களை அனுமதிக்க வேண்டாம்' என தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
தலைமை ஒருங்கிணைப்பாளர் பாலசுப்ரமணியன் கூறியதாவது: ஊராட்சி செயலாளர்களை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கக் கூடாது. கிராம ஊராட்சியில் பணிபுரியும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குனர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஊராட்சியில் பணியாற்றும் துாய்மைக் காவலர்களுக்கு மாதச்சம்பளமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.
வி.பி.ஆர்.சி., பி.எல்.எப்., கணக்காளர்களுக்கு தனிநிதி ஒதுக்கீடு செய்து, மாதச்சம்பளமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு தேர்வு நிலை, சிறப்பு நிலை ஊதியத்தை கருவூலம் மூலம் வழங்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள பெரிய ஒன்றியங்களை பிரித்து புதிய ஒன்றியங்களை உருவாக்க வேண்டும். தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட கணினி உதவியாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கி பணிநிரந்தரம் செய்ய வேண்டும். முழுசுகாதார திட்ட, மாவட்ட, வட்டார ஒருங்கிணைப்பாளர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.
இவற்றை வலியுறுத்தி திருச்சியில் நடந்த மாநில ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். செயல்படுத்த தாமதம் செய்தால் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சென்னையில் டிச.19ல் பல ஆயிரம் பேர் பங்கேற்கும் ஊர்வலத்தை நடத்த உள்ளோம் என்றார்.