ADDED : ஏப் 28, 2025 06:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்துப் பணியாளர் சங்க மாநில தலைவர் சார்லஸ், ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடியிடம் அளித்த மனு:
மதுரை ஊரக வளர்ச்சித்துறை பணி மேற்பார்வையாளர்கள் நீண்ட காலமாக ஒரே ஒன்றியத்தில் பணியாற்றி வருவதால், பல்வேறு இன்னல்கள், மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது, குடும்பச் சூழ்நிலை போன்ற பல விஷயங்களில் சிக்கி அவதிப்பட்டு வருகின்றனர்.
ஒரே பணியிடத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக 15 பேரும், மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாக 20 பேர் என மொத்தம் 35 பேர் பணியாற்றி வருகின்றனர்.
இவ்வாறு நீண்டகாலமாக ஒரே இடத்தில் பணியாற்றுவதால் உடல்நலம், மனவேதனைகள் என உழல்கின்றனர்.
அவர்களின் இன்னல்களை களையும் வகையில், சுமுக பணிச்சூழலை உருவாக்கித் தரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

