ADDED : பிப் 11, 2024 12:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே பூச்சிபட்டியைச் சேர்ந்தவர்கண்ணன் 30. இவரது தங்கையின் மகன் திலிப் பாண்டி 9,க்கு நீச்சல் கற்றுத்தர கிணற்றுக்கு அழைத்துச் சென்றார்.
நீண்ட நேரமாகியும் அவர்கள் வீட்டுக்கு வரவில்லை. கிணற்றில் மூழ்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீஸ், தீயணைப்பு படையினருடன் உறவினர்கள் தேடினர். கண்ணன் உடலை மீட்டனர். சிறுவனும் இறந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் கிணற்றில் தேடினர்.