/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'திருமணத்தடை நீங்கி வரன் அமைவதற்கான யாகங்கள்'
/
'திருமணத்தடை நீங்கி வரன் அமைவதற்கான யாகங்கள்'
ADDED : ஜன 08, 2026 06:02 AM
மதுரை: மதுரையில் அனுஷத்தின் அனுக்கிரஹம் அமைப்பு சார்பில், திருமணத்தடை நீங்கி வரன் அமைவதற்கான யாகங்கள் ஜன., 10ல் நடக்கின்றன என அமைப்பு நிறுவனர் நெல்லை பாலு தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:திருமண வயதில் பலருக்கும் ஏற்ற வரன் அமையாததால் திருமணம் தள்ளிப் போகிறது. இவர்களுக்கு நல்ல வரன் அமைவதற்காக அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் சிறப்பு யாகங்கள் நடக்கின்றன.ஜன.,10 காலை 10:31 முதல் மதியம் 1:30 மணி வரை மதுரை எஸ்.எஸ்.காலனி பொன்மேனி நாராயணன் ரோட்டிலுள்ள எஸ்.எம்.கே., கல்யாண மண்டபத்தில் நடக்கிறது.
அன்று காலை சிறப்பு ஹோமங்களுடன் சங்கல்பங்கள் செய்யப்படும். ஆண்களுக்கு 'கந்தர்வராஜர் யாகம்', பெண்களுக்கு 'சுயம்வர கலா பார்வதி' யாகம் ஆச்சார்யார்களால் நடத்தப்படும். அதை தொடர்ந்து வெங்கடேஸ்வர பாகவதர் குழுவின் 'ஆண்டாள் திருக்கல்யாண வைபவம்' நாம சங்கீர்த்தனம் நடக்கிறது. இதில் பங்கேற்க கட்டணம் ரூ. 1500. பதிவு செய்வோர்க்கு காஞ்சி மஹாபெரியவரின் புகைப்படம், பிரசாதம், அட்சதை வழங்கப்படும். வெளியூர்காரர்களுக்கு கூரியரில் அனுப்பப்படும். பங்கேற்க 94426 30815 ல் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

