/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தனிச்சியத்தில் பாதயாத்திரை பக்தர்கள் பாதுகாப்பு கேள்விக்குறி
/
தனிச்சியத்தில் பாதயாத்திரை பக்தர்கள் பாதுகாப்பு கேள்விக்குறி
தனிச்சியத்தில் பாதயாத்திரை பக்தர்கள் பாதுகாப்பு கேள்விக்குறி
தனிச்சியத்தில் பாதயாத்திரை பக்தர்கள் பாதுகாப்பு கேள்விக்குறி
ADDED : ஜன 02, 2025 05:32 AM

வாடிப்பட்டி: சமயநல்லுார் அருகே தனிச்சியம் பகுதி வழியாக பழநி செல்லும் பாதயாத்திரை பக்தர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.
மதுரை - திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் அலங்காநல்லுார் தனிச்சியம் பிரிவில் மேம்பால பணிகள் நடக்கிறது. இப்பணிகளுக்காக ரோட்டின் இருபுறமும் சர்வீஸ் ரோடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பாலம் தனிச்சியம் - வடுகபட்டி வரை 500 மீ., துாரத்திற்கும் மேல் மேம்பால பணிகள் செல்கிறது. தற்போது பழநி பாதயாத்திரை பக்தர்கள் சர்வீஸ் ரோடு அருகே அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால் கால்வாய் மீதான பிளாட்பார்ம் சிலாப்களில் நடந்து செல்கின்றனர். இந்த ரோடு நெடுக மின் விளக்குகள் இன்றி இருள் சூழ்ந்துள்ளது.
சிலாப்களை துாக்கி பராமரிப்பு செய்வதற்காக, குறிப்பிட்ட இடைவெளியில் கம்பி வளையங்கள் உள்ளன. இந்த வளையங்கள் சிலாப்களில் நடந்து செல்லும் பாதயாத்திரை பக்தர்களின் பாதங்களை பதம்பார்க்கின்றன.
சில இடங்களில் சிலாப்புகள் சேதடைந்துள்ளன. ரோட்டில் நடந்த வாகன விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
போக்குவரத்தும் பாதிக்கிறது. எனவே பக்தர்கள் நலன் கருதி இப்பகுதியில் மின்விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும்.

