ADDED : மார் 10, 2026 06:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: தமிழ்நாடு உடனடி சாம்பிராணி தயாரிப்பாளர் சங்க அவசர செயற்குழு கூட்டம் தலைவர் ஜீயர்பாபு தலைமையில் நடந்தது. செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் ராஜா சவுந்தரம் முன்னிலை வகித்தனர்.
சாம்பிராணி தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலை சில மாதங்களாக தொடர்ந்து அதிகரிக்கிறது. தற்போது மூலப்பொருட்கள் விலை 60 சதவீதம் வரை உயர்ந்துள்ளதால், தயாரிப்பாளர்கள் விலை உயர்வை மேற்கொள்ளும் கட்டாயத்தில் உள்ளனர்.
தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வந்தாலும் தரத்தை பாதுகாத்து வந்தோம். தற்போது விலை உயர்வு தவிர்க்கப்படாததாக உள்ளது. எனவே சாம்பிராணி விலை 25 சதவீதம் உயர்த்தப்பட உள்ளது. வியாபாரிகள், நுகர்வோர் புரிந்துணர்வுடன் ஆதரவு தர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர்.

