ADDED : ஆக 21, 2026 12:43 AM
அ நிறம் | அளவு
மேலுார்: மேலுார் நகராட்சியில் தமிழ்நாடு நடைபாதை வியாபாரிகள் நகர விற்பனை குழு உறுப்பினர் தேர்தல் நடந்தது. மேலாளர் நிலை கண்ணன், தேர்தல் பணியாளராக ஊழியர்கள் ஜோதி, திலகவதி, பார்த்தசாரதி, சுகந்தி ஆகியோர் தேர்தலை நடத்தினர்.
தாழ்த்தப்பட்டோர், மகளிர், மாற்றுத்திறனாளி வகுப்பினர், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பொது என ஆறு பிரிவினருக்கான தேர்தலில் 12 பேர் போட்டியிட்டனர். மொத்த வாக்காளர்கள் 418 பேர் தலா ஆறு ஓட்டுகள் வீதம் ஓட்டளித்தனர்.
இதில் நாகேந்திரன் 178, துரைப்பாண்டி 175, அபுதாகிர் 148, ஜாகிர் உசேன் 148 அமுதா 146, லட்சுமணன் 135, ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றனர்.
