சுகாதாரகேட்டில் தொழிலாளர்கள்! ரூ.50 ஆயிரம் அபராதம்
சுகாதாரகேட்டில் தொழிலாளர்கள்! ரூ.50 ஆயிரம் அபராதம்
ADDED : அக் 16, 2026 07:37 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை விளாங்குடி பகுதியில் ஷாப்பிங் மால் கட்டுமானப் பணியில் உ.பி. உள்ளிட்ட வட மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தங்கியுள்ள பகுதியில் மழை நீர் சூழ்ந்தும், கழிவு நீர் கலந்தும் சுகாதாரக் கேடாக காணப்பட்டது. காய்கறிகள், மசாலாப் பொருட்கள் கழிவுநீருக்குள் கிடந்தன. அப்பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்புக்காக மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ராமநாதன் தலைமையில் அலுவலர்கள் சென்றபோது இந்நிலையை கண்டு அதிர்ச்சியடைந்தனர். கழிவு நீரை தொழிலாளர்கள் கையால் அகற்றியதும் தெரியவந்தது. கொசுக்கள் உற்பத்தியாகும் மையமாகவும் அப்பகுதி விளங்கியது.
இதையடுத்து தொழிலாளர்கள் தங்க ஏற்பாடு செய்த திண்டுக்கல் ஒப்பந்ததாரருக்கு மாநகராட்சி கமிஷனர் கவுரவ் குமார் உத்தரவுப்படி ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
