தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/துாய்மை பணியாளர்கள் மறியல், ஆர்ப்பாட்டம்

துாய்மை பணியாளர்கள் மறியல், ஆர்ப்பாட்டம்

துாய்மை பணியாளர்கள் மறியல், ஆர்ப்பாட்டம்


UPDATED : அக் 06, 2026 12:00 AM

ADDED : அக் 05, 2026 05:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 12:00 AM ADDED : அக் 05, 2026 05:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மேலுார்: மேலுார் நகராட்சியில் 27 வார்டுகளை சுத்தப்படுத்த ஜெய் சீரடி சாய் மேன்பவர் ஏஜென்சி மூலம் ஒப்பந்த அடிப்படையில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் துாய்மை பணியாளர்களாக பணிபுரிகின்றனர். இவர்கள் நேற்று நகராட்சி முன்பு ஆர்ப்பாட்டம், சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நகராட்சி வழங்கும் சம்பளத்தை ஒப்பந்ததாரர் குறைத்து கொடுப்பதால், அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யவும், தங்களை நிரந்தர பணியாளராக மாற்றக் கோரியும், சம்பளம், இ.எஸ்.ஐ., இ.பி.எப்., வழங்க வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்திற்காக பணி புறக்கணிப்பு செய்து சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

அவர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், நகராட்சி பொறியாளர் முத்துக்குமார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து கலெக்டர், மண்டல அதிகாரியை சந்திப்பதாக முடிவு செய்யப்பட்டதால், மறியலை கைவிட்டனர். ஆர்ப்பாட்டத்தால் திருவாதவூர் ரோட்டில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

மின்வெட்டு மறியல்



மேலுார் முத்துராமலிங்கம்பட்டியில் 200 க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப் பகுதியில் மின்தட்டுப்பாடு, திடீர் மின்தடை ஏற்படுகிறது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. ஆத்திரமடைந்த மக்கள் நேற்று காரைக்குடி ரோட்டில் கீழையூரில் பஸ் மறியலில் ஈடுபட்டனர்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணபோஸ், மின்வாரிய ஏ.இ., ராஜ்குமார் ஒரு வாரத்தில் மின்தடையை சரி செய்வதாக கூறியதால், மறியலை கைவிட்டனர். காரைக்குடி ரோட்டில் 15 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us