ADDED : ஏப் 08, 2026 05:13 AM
அ நிறம் | அளவு
சோழவந்தான்: சோழவந்தான் ஐயப்பன் கோயிலில் சன்மார்க்க கூட்டம் நடந்தது. தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். செயலாளர் நாகையா முன்னிலை வகித்தார். அருள் விளக்கேற்றி அகவல் பாராயணம் படிக்கப்பட்டது.
புலால் உண்ணாமை எனும் தலைப்பில் கார்த்திக் பேசினார். ஜோதி வழிபாடு நடந்தது. உபதலைவர் ராஜு நன்றி கூறினார். நிர்வாகிகள் ரமாதேவி, ரகுராமன் அன்னதானம் வழங்கினர்.
