ADDED : மார் 01, 2026 06:29 AM

அ நிறம் | அளவு
மதுரை: ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்களையும் மாடுபிடி வீரர்களையும் கவுரவிக்கும் விழா அ.தி.மு.க., மருத்துவரணி மாநில இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் ஏற்பாட்டில் நேற்று மதுரை அந்தநேரி ஜவஹர்லால் நகரில் நடந்தது.
இதில் காளை உரிமையாளர்களுக்கு பட்டு வேட்டி, சேலை மற்றும் ரூ. 5000. மாடுபிடி வீரர்களுக்கு பட்டு வேட்டியுடன் ரூ.5 ஆயிரத்தை டாக்டர் சரவணன் வழங்கினார்.
அ.தி.மு.க நிர்வாகிகள் ஆர்.கே ரமேஷ், எம்.எஸ். கே. மன்னன், சரவணன் குமார், கண்ணன், வழக்கறிஞர்கள் குமரதேசிகன், ராமசுப்பிரமணியன், செழியன், ராமமூர்த்தி, முத்தானந்தம், அஜித்குமார், சண்முகம், கணேசன், ரஞ்சித் முகமது, புரட்சிக்கண்ணன், மாரி செல்வம், பிரேம்குமார், விமல், செல்வந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
