நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: பரவை மயூரநாதர் கோயிலில் கந்தசஷ்டி விழா அக். 22ல் பக்தர்கள் காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
தினமும் இரவு 7:00 மணிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம், திருச்செந்துார், பழநி, சுவாமிமலை உள்பட அறுபடைவீடு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று முன்தினம் மாலை கோயில் முன்பாக சூரசம்ஹாரம் நடந்தது.
சுவாமிக்கு சாந்தாபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு அர்ச்சனைகள் நடந்தன. தொடர்ந்து வள்ளி, தேவசேனா- மயூரநாதர் திருக்கல்யாண கோலத்தில் காட்சி அளித்தார். திரளான பக்தர்கள் வழிபட்டனர்.

