/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சவுராஷ்டிரா கல்லுாரி பட்டமளிப்பு விழா
/
சவுராஷ்டிரா கல்லுாரி பட்டமளிப்பு விழா
ADDED : டிச 12, 2025 06:52 AM

திருப்பரங்குன்றம்: மதுரை சவுராஷ்டிரா கல்லுாரி சுயநிதி பிரிவு பட்டமளிப்பு விழா செயலாளர் குமேரேஷ் தலைமையில் நடந்தது.
தலைவர் பன்ஷிதர், பொருளாளர் பாஸ்கர், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ராமசுப்பிரமணியன், வெங்கடேஸ்வரன், சரவணன் பங்கேற்றனர். ஓய்வு பெற்ற வனத்துறை அலுவலர் ராஜ்குமார், 203 மாணவர்களுக்கு பட்டம் வழங்கி பேசுகையில், ''வெற்றி உங்களது கையில் மட்டுமே உள்ளது. இளைஞர்கள் நினைத்தால் சாதிக்க முடியும்.
மதிப்பெண்கள் பெறுவது மட்டுமே நோக்கமாக அல்லாமல், அறிவுத்திறனை வளர்க்கவும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அறிவியல் பாடங்களில் மாணவர்களின் விருப்பம் மிகக் குறைவாக உள்ளது. அறிவியல் பாடங்களில் தான் வேலை வாய்ப்பு அதிகம் உள்ளது என்றார்.
முதல்வர் சீனிவாசன் உறுதிமொழி வாசிக்க பட்டம் பெற்றோர் உறுதிமொழி ஏற்றனர்.

