ADDED : அக் 03, 2025 01:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் சவுராஷ்டிரா செயல்பாட்டுக்குழுவின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. குழுத் தலைவர் முன்னாள் டி.ஜி.பி., கிஷோர்குமார் தலைமை வகித்தார். மாநாட்டுத் தலைவராக தினேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மதுரையில் டிச.28ல்அரசியல் மாநாடு நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., சரவணன், பா.ஜ., ஏ.ஆர்.மகாலட்சுமி, தி.மு.க., நிர்வாகி திலீபன் சக்கரவர்த்தி, த.வெ.க., நிர்வாகி கோபிசன், மாநாட்டின் அரசியல் சேவைக்குழுவில் உறுப்பினர்களாகச் சேர உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
செயல்பாட்டுக்குழுவின் புதிய பொறுப்பாளர்களும் அறிமுகப்படுத்தப்பட்டனர். வழக்கறிஞர் பிரசாந்த் ஷர்மிளா பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற் றனர்.