/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஜி.எஸ்.டி., அதிகாரியிடம் சவுராஷ்டிரா வர்த்தகர்கள் மனு
/
ஜி.எஸ்.டி., அதிகாரியிடம் சவுராஷ்டிரா வர்த்தகர்கள் மனு
ஜி.எஸ்.டி., அதிகாரியிடம் சவுராஷ்டிரா வர்த்தகர்கள் மனு
ஜி.எஸ்.டி., அதிகாரியிடம் சவுராஷ்டிரா வர்த்தகர்கள் மனு
ADDED : ஜன 01, 2025 05:51 AM
மதுரை :  மதுரை வணிகவரித்துறையில் ஜி.எஸ்.டி., குறைதீர் கூட்டம் வருவாய் அதிகாரி அன்வர் அலி முன்னிலையில் நடந்தது. இதில் சவுராஷ்டிரா சமூகத்தின் பல்வேறு சங்கத்தினரும் கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். அவற்றை ஜி.எஸ்.டி.கவுன்சிலுக்கு பரிந்துரைப்பதாக அவர் உறுதியளித்தார்.
சவுராஷ்டிரா சேம்பர் ஆப் காமர்ஸ் பொதுச் செயலாளர் ஏ.பி.குமரேஷ்பாபு மற்றும் நிர்வாகிகள் அளித்த மனு:
ஜி.எஸ்.டி., உச்சவரம்பு சேவைக்கு ரூ.40 லட்சம், வணிகத்திற்கு ரூ.80 லட்சமாகவும் உயர்த்த வேண்டும். வியாபாரிகளுக்கு நோட்டீஸ் கொடுக்கும் காலக்கெடு 5 ஆண்டுகள் வரை என்பதை 18 மாதத்திற்குள் கொடுக்க வலியுறுத்தினோம். உள்ளீடு வரி எடுப்பதற்கு காலஅவகாசம் 18 மாதம் மட்டுமே உள்ளன. 6 மாதங்களுக்கு ஒருமுறைதான் ஜி.எஸ்.டி., திருத்தம் செய்ய வேண்டும். அடிக்கடி செய்வதால் நடைமுறை சிக்கலுக்கும், புரிதலுக்கும் சிரமமாக உள்ளது.
வாடகை கட்டுமானங்களுக்கு உள்ளீட்டு வரி எடுத்துக் கொள்ளும் விதமாக சட்ட திருத்தம் செய்ய வேண்டும். ஜி.எஸ்.டி., ரிட்டர்னில் தங்களுடைய விளக்கங்களை கூறுவதற்கு தனியாக 'காலம்' (பகுதி) ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

