ADDED : மார் 03, 2024 06:06 AM

அ நிறம் | அளவு
மதுரை: தேர்தல் கமிஷன் உத்தரவால் மதுரை எஸ்.பி., டோங்கரே பிரவீன் உமேஷ் சிவகங்கைக்கு மாற்றப்பட்டார்.
இவருக்கு பதில் அங்கிருந்த பி.கே.அரவிந்த் 32, நேற்று பொறுப்பேற்றார். கோவையைச் சேர்ந்த இவர், 2019ல் ஐ.பி.எஸ்., அதிகாரியாக பணியில் சேர்ந்தார்.
பி.இ., மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவர். ஏ.எஸ்.பி.,யாக ராமநாதபுரத்திலும், கடந்தாண்டு ஜனவரியில் பதவி உயர்வு பெற்று மதுரை வடக்கு துணைகமிஷனராகவும் பணியாற்றினார். பின்னர் சிவகங்கை எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டார்.
