ADDED : ஜூலை 30, 2025 06:52 AM
நுால் அறிமுக விழா
திருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் உலகளாவிய உள்ளத்தின் குரல் புத்தக குழுவினர், மதுரை இலக்கிய மன்றம் சார்பில் எழுத்தாளர் பிரேம் தாவத்தின் 'உள்ளத்தின் குரல்' நுால் அறிமுக விழா நடந்தது. முதல்வர் ராம சுப்பையா தலைமை வகித்தார். தலைவர் விஜயராகவன், கவுரவ தலைவர் ராஜகோபால் துவக்கி வைத்தனர். கலை பண்பாட்டு ஒருங்கிணைப்பாளர் ரஞ்சித் குமார் வரவேற்றார். இயக்குனர் பிரபு, டீன் அழகேசன், பேராசிரியர்கள் ஜெயலட்சுமி, பாஸ்கரன் பேசினர். பட்டிமன்றத்திற்கு அவனி மாடசாமி நடுவராக இருந்தார். அன்புணர்வே என்ற அணியில் பேராசிரியர்கள் சாத்தம்மையப்பிரியா, தினேஷ் ராஜா, சியாமளா, நன்றி உணர்வே என்ற அணியில் பேராசிரியர்கள் சிலம்பரசன், கார்த்திக் ராஜா, அமலா பேசினர்.
பட்டமளிப்பு விழா
மேலுார்: அரசு கல்லுாரியில் பட்டமளிப்பு விழா முதல்வர் பாண்டிமாதேவி தலைமையில் நடந்தது. மதுரை காமராஜ் பல்கலை தேர்வாணையர் முத்தையா 11 துறைகளின் இளநிலை, முதுநிலை பட்டதாரிகள் 542 பேருக்கு பட்டங்களை வழங்கி பேசினார். பேராசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் பங்கேற்றனர்.
தேசியத்திருவிழா
மதுரை: மதுரை கல்லுாரியில் தேசபக்தி விழிப்புணர்வு கருத்தரங்கம், மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடந்தது. முதல்வர் சுரேஷிற்கு ராமகிருஷ்ண மடம் தலைவர் சுவாமி நித்திய தீபானந்தர் விவேகானந்தர் விருது வழங்கினார். என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் ராபர்ட் வரவேற்றார். மதுரை காமராஜ் பல்கலை இணைப்பேராசிரியர் பாரி பரமேஸ்வரன் தலைமை வகித்தார்.
கல்லுாரி சுயநிதிப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் முன்னிலை வகித்தார். காந்தி மியூசிய இயற்கை வாழ்வியல் தேவதாஸ், லட்சியம் சிதம்பரம், மருத்துவர் கருணாகரன் தேச பக்தி பாடல்கள் பாடினர். மதுரை காஸ்மாஸ் அரிமா சங்கத்தலைவர் ராஜேஷ் கண்ணன், கலாம் கனவு இயக்கத் தலைவர் ராஜா, ஜே.சி.ஐ. மதுரை எக்செல் பட்டயத் தலைவர் ரத்தீஷ் பாபு, வழக்கறிஞர் ஆறுமுகம், சமூக ஆர்வலர் இல. அமுதன் ஆகியோர் பேசினர். புதிய பாரதம் பேச்சுப்போட்டியில் டில்லியில் சுதந்திர தினத்தன்று பேச தேர்வான மாணவி ஜோதிகா பாராட்டப்பட்டார். கல்லுாரி போட்டியில் மாற்றுத்திறனாளி மாணவி கஜலட்சுமியை சக மாணவி துாக்கி வந்து பரிசு பெற்றார். கண்ணதாசன் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை நேதாஜி சுவாமிநாதன் ஒருங்கிணைத்தார்.