ADDED : ஆக 07, 2025 05:31 AM
வணிக சந்திப்பு போட்டி மதுரை: பாத்திமா கல்லுாரியில் வணிகவியல் துறை (ஹானர்ஸ்) சார்பில் 'அக்காஸ்பைர் -25' என்ற பள்ளி மாணவர்களுக்கு வணிகவியல் பாடம் குறித்து ஆர்வம் ஏற்படுத்தும் வகையிலான வணிகச் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. துறைத் தலைவர் மீனா வரவேற்றார். செயலாளர் இக்னேஷியஸ் மேரி துவக்கி வைத்தார். முதல்வர் பாத்திமா மேரி முன்னிலை வகித்தார். ஒளிப்பதிவாளர் பிரபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். 20க்கும் மேற்பட்ட வணிகப் பிரிவு மாணவர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் திருப்பரங்குன்றம்: சவுராஷ்டிரா மகளிர் கல்லுாரியில் பள்ளிகளுக்கு இடையிலான சுதந்திர தின சிறப்பு போட்டிகள் ஆக. 14 காலை 9:00 மணி முதல் மதியம் வரை நடக்கிறது. கட்டணம் இல்லை. தமிழ், ஆங்கிலம் பேச்சு போட்டி, ஓவியம், நாடக போட்டிகளில் பங்கெடுக்க விரும்பும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் ஆக. 8க்குள் 99434 24500ல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என கல்லுாரி தலைவர் பன்ஷிதர், செயலாளர் குமரேஷ், பொருளாளர் பாஸ்கர், நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரன், முதல்வர் பொன்னி தெரிவித்தனர்.