ADDED : டிச 17, 2025 07:01 AM
மாற்றுத்திறனாளிகள் தின விழா
மதுரை: உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா மதுரை மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் டி.வி.எஸ்., ஆரோக்கிய நலவாழ்வு அறக்கட்டளை சார்பில் மதுரைமீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் நடந்தது. கலெக்டர் பிரவீன்குமார் தலைமை வகித்து மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக டி.வி.எஸ்., ஆரோக்கிய நலவாழ்வு அறக்கட்டளை, யுனிசெப் இணைந்து செயல்படுத்தி வரும் திட்டங்களை அறக்கட்டளை இயக்குநர் சுப்பிரமணியன் விளக்கினார். மதுரை அரசு மருத்துவனை டீன் சுந்தரேஷ் குமார், மீனாட்சி அரசு மகளிர் கல்லுாரி முதல்வர் வான்மதி, சமூக நல அலுவலர் காந்திமதி, மாவட்ட தொழில் வழிகாட்டு மையம் துணை இயக்குநர் கண்ணன் பங்கேற்றனர். மாற்றுத்திறனாளிகள் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. வெங்கடசுப்பிரமணியன் நன்றி கூறினார்.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
மதுரை: உலகனேரி அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் மாற்றுதிறனாளி குழந்தைகளுக்கான பயிற்சி மையத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடந்தது. சிறப்பு விருந்தினராக விஜயதயா, டாக்டர் முத்துவிஜயன் பங்கேற்றனர். நாகலட்சுமி நன்றி கூறினார். ஏற்பாடுகளை வெற்றிச்செல்வி, ரேணுகா செய்தனர்
புரிந்துணர்வு ஒப்பந்தம்
மதுரை: தியாகராஜர் ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட் கல்லுாரி நூலகம் - எஸ்.கே.ஆர்.ஜி.சி., அகாடமி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. தலைமை நுாலகர் ேஷக் மைதீன், அகாடமி நிறுவனர் சதீஷ்குமார் பங்கேற்றனர். மாணவர் மேம்பாட்டு திட்டங்கள், ஆசிரிய பரிமாற்றம், கூட்டு ஆராய்ச்சி நடவடிக்கை, கற்றல் அனுபவங்களை வளப்படுத்துதல், மாணவருக்கான தொழில்முறை வாய்ப்பை மேம்படுத்துதல் ஆகிய வாய்ப்புகள் கிடைக்கும்.
சொற்பொழிவு
மதுரை: பாத்திமா கல்லுாரி முதுகலை, ஆராய்ச்சி வேதியியல் துறை சார்பில் முன்னாள் முதல்வர் சகுந்தலா அறக்கட்டளை சொற்பொழிவு நடந்தது. மாணவி ஜப்ரீனா பர்வின் வரவேற்றார். துறை தலைவர் சுகுமாரி தலைமை வகித்தார். 'சகுந்தலா கல்விப் பங்களிப்பு' என்ற தலைப்பில் அமெரிக்கன் கல்லுாரி பேராசிரியை ஜெமிமா பாலசெல்வி ஜூலியானா சொற்பொழிவாற்றினார். மேலும் உலோக கரிம வேதியியல் கட்டமைப்புகளின் மாற்றிமைக்கக் கூடிய கட்டமைப்புகள், வாயு சேமிப்பு, உணர்தல், சுற்றுச்சூழல் சீர்திருத்தங்கள் குறித்து பேசினார். மாணவி ஜனார்த்தனி நன்றி கூறினார்.

