தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பள்ளி ஆண்டு விழா

பள்ளி ஆண்டு விழா

பள்ளி ஆண்டு விழா


ADDED : ஜன 14, 2025 05:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 14, 2025 05:31 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உசிலம்பட்டி: உசிலம்பட்டி ஆச்சி இன்டர்நேஷனல் பள்ளியின் 10ம் ஆண்டு விழா நடந்தது. இயக்குநர் ஜெயகிஷோர்குமார் வரவேற்றார். தாளாளர் காசிமாயன், முதல்வர் பாஸ்டின்குமார், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற போலீஸ் டி.ஜி.பி., சைலேந்திரபாபு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற, மாநில, மாவட்ட அளவில் நடந்த பல்வேறு போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கும், பாடங்களில் 100 மதிப்பெண்கள் பெற வைத்த ஆசிரியர்களுக்கும் பரிசு வழங்கினார்.

அவர் பேசுகையில், ''உங்கள் குழந்தைகளுக்கு கல்வி என்னும் ஆயுதத்தை கொடுங்கள். உலக அளவில் பல்வேறு வாய்ப்புகள் காத்திருக்கின்றன. அதைவைத்து அவர்கள் போராடி வெற்றி பெறட்டும். தரமான கல்விக்கான சூழலை உருவாக்கிக்கொடுங்கள். தினசரி நாளிதழ் வாசிக்கும் பழக்கம் போன்றவற்றை அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள் என்றார். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us