நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: கருமாத்துார் புனித கிளாரட் மேல்நிலைப் பள்ளியின் 43வது ஆண்டு விழா சென்னை கிளாரட் சபை மறை மாநிலத்தலைவர் சேசுதாஸ் தலைமையில் நடந்தது.
பொருளாளர் செல்வமணி வரவேற்றார். ஆண்டறிக்கையை மாணவர்கள் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியாகவழங்கினர். ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் பாத்திமா, மாரியப்பன், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகள் நடந்தன. தலைமை ஆசிரியர் சூசைமாணிக்கம் நன்றி கூறினார்.

