
மதுரை: மதுரை அவனியாபுரம் பாலையம்பட்டி நாடார்கள் உறவின்முறை சார்பில் செயல்படும் சங்கரநாராயண நாடார் மெட்ரிக் பள்ளியின் 31வது ஆண்டு விழா நடந்தது.
உறவின்முறை தலைவர் முருகேசன், செயலாளர்கள் நாகசங்கர், மின்னல்ராஜ், பொருளாளர் ஆனந்த வேலன் முன்னிலை வகித்தனர். மடீட்சியா முன்னாள் தலைவர் சம்பத், சிறந்த மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.
அவர் பேசுகையில், ''மாணவர்கள் அலைபேசி பயன்பாட்டை குறைத்து, உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். கல்வி மட்டுமின்றி தனித்திறன், ஆர்வம் ஆகியவற்றை அடையாளம் கண்டு வளர்க்க வேண்டும்.
குழந்தைகளிடம் நேர்மறையான வார்த்தைகளை பெற்றோர் பேச வேண்டும். அது அவர்களிடத்தில் தன்னம்பிக்கையை வளர்ப்பதுடன் மனவளர்ச்சியை மேம் படுத்தும்'' என்றார்.
கலைநிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாடுகளை பள்ளி செயலாளர் இசை அமுதன், தலைமையாசிரியர் மங்கையர்க்கரசி, உறவின்முறை உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

