
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை பெருங்குடி அமுதம் மெட்ரிக் பள்ளி 28-வது ஆண்டு விழா தாளாளர் ஜெயவீரபாண்டியன் தலைமையில் நடந்தது. சிறப்பு விருந்தினராக முன்னாள் மாணவர் டாக்டர் செந்தில்குமார் பங்கேற்றார்.
2ம் நாள் நிகழ்வில் முதன்மை கல்வி அலுவலர் தயாளன், தனியார் பள்ளிகள் கல்வி அலுவலர் கார்மேகம் பங்கேற்றனர். முதல்வர் ஜெயஷீலா முன்னிலை வகித்தார். கலைநிகழ்ச்சிகள் நடந்தன. கே.ஜி. முதல் 12ம் வகுப்பு வரை படித்து முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கும், முழு வருகை வந்த மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கேடயங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்வை துணைமுதல்வர் ஸ்டெல்லா ஜெயமணி ஒருங்கிணைத்தார்.

