ADDED : மார் 21, 2026 07:41 AM

அ நிறம் | அளவு
மதுரை: மதுரை அரோபனா இந்தியன் பள்ளி 4வது ஆண்டு விழா, அரபிந்தோ மீரா மெட்ரிக் பள்ளி 28வது ஆண்டுவிழா, சேர்மன் சந்திரன் தலைமையில் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடந்தது.
அரோபனா இந்தியன் பள்ளி முதல்வர் கிறிஸ்டிலா சைலஸ் வரவேற்றார். ஓய்வு பெற்ற டி.ஜி.பி., ரவி, சிறந்த மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். சக் ஷம் தேசிய துணைத் தலைவர் காமாட்சி, பள்ளி நிர்வாக இயக்குநர் அபிலாஷ், அரபிந்தோ மீரா கல்வியியல் கல்லுாரி முதல்வர் அஜூமு நிஷா, துணை இயக்குநர் நிக்கி புளோரா, மூத்த முதல்வர் ஞானசுந்தரி உள்பட பலர் பங்கேற்றனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.
