/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கோயில் பிரச்னையால் பள்ளி முற்றுகை
/
கோயில் பிரச்னையால் பள்ளி முற்றுகை
ADDED : ஜன 24, 2026 05:25 AM

திருமங்கலம்: ஆலம்பட்டியில் கிராம மந்தையில் முத்தாலம்மன் கோயில் உள்ளது. இதன் எதிரில் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பீடத்தை வைக்க, பதிலுக்கு மக்கள் விநாயகர் சிலையை வைத்தனர். இதுதொடர்பான வழக்கில் பீடத்தையும், விநாயகர் சிலையையும் அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் கோயிலையும் அகற்ற முடிவானது. இதனால் ஆத்திரமுற்ற மக்கள், 'எங்களது இடத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய பள்ளியை காலி செய்யுங்கள். அங்கு கோயிலை கட்டிக்கொள்கிறோம்' என்றுக்கூறி பள்ளியை 5 மணி நேரம் நேற்று முற்றுகையிட்டனர். பள்ளி திறப்பதில் தாமதம் ஏற்பட்டது.
தாசில்தார் சுரேஷ், ஏ.எஸ்.பி., அன்சூல் நாகர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஜன.,27ல் கலெக்டர் தலைமையில் நடக்கும் அமைதி கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.

